சனி, 16 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 653

திருக்குறள் – சிறப்புரை : 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். – ௬௫
ஒருசிறிது துன்பம் நேர்ந்தவிடத்தும் தடுமாற்றம் இல்லாத தெளிந்த அறிவினையுடையார், ஒரு போதும் பிறரால் இகழப்படும் செயல்களைச் செய்யார்.
“ இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடைக்கடன் இறுத்த செம்மலோய்…” ---மலைபடுகடாம்.

நன்று இது; தீது இது என, ஆராய்ந்தறியும் பெரியோர் இறந்துபோக, உலகம் உள்ளவரை யாண்டும் நிலைத்து நிற்கும் கொடையாகிய கடமையைச் செய்து முடித்த செம்மல், நன்னன். 

1 கருத்து: