66. வினைத் தூய்மை
திருக்குறள்
– சிறப்புரை : 651
துணைநலம் ஆக்கம்
தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம்
தரும்.
--- ௬௫௧
ஒரு செயலைச் செய்வதற்கு அமைந்த
துணைநலம் செல்வம் மட்டுமே தரும் ஆனால், செய்யும் செயலின்கண் கொண்ட வினைத் தூய்மை விரும்பும்
எல்லாவற்றையும் தரும்.
“இசையாது எனினும் இயற்றி ஓர்
ஆற்றால்
அசையாது
நிற்பதாம் ஆண்மை…” --நாலடியார்
எடுத்துக்கொண்ட ஒரு செயல், தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை
முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம்.
நன்று.
பதிலளிநீக்கு