வியாழன், 21 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 658

திருக்குறள் – சிறப்புரை : 658
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். ----
சான்றோர்களால் செய்யத்தகாதன என விலக்கி வைக்கப்பட்ட செயல்களைச் செய்யாது விலகி இருத்தல்  வேண்டும் ; மீறிச் செய்யத் துணிந்தால் அவை  வெற்றிகரமாக முடிந்தாலும் இறுதியில் துன்பமே தரும்.

“அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் இல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.” –நாலடியார்.
குற்றமற்றவர்கள் அறநெறியைப் பற்றி உரைக்கும் போது நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக