வியாழன், 7 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 645

திருக்குறள் – சிறப்புரை : 645
சொல்லுக சொல்லைப்  பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. ---- ௬௪௫
ஒரு சொல்லைச் சொல்வதற்குமுன், அச்சொல்லைப் வேறொரு வெல்லும் சொல் இல்லாமை அறிந்து சொல்ல வேண்டும்.
வெல்லும் சொல்லே சொற்போரில் வெல்லும்.
“பல் கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடி…”—பட்டினப்பாலை.
பல்லாற்றானும் கற்றும் கேட்டும் முன்னோர் நெறியில் ஒழுகும் சிறந்த ஆசிரியர்கள், சொற்போர் நிகழ்த்தற்குப் பின்வாங்க மாட்டோம் எனக் காட்டுதற்கு அடையாளமாக உயர்த்திக் கட்டிய கொடி.


1 கருத்து: