திருக்குறள்
– சிறப்புரை : 643
கேட்டார்ப்
பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம்
சொல்.
--- ௬௪௩
கேட்பாரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலுடன் கேட்காதவரையும் (பிறர் வழியாக
அறிந்தோர்) கேட்கத்தூண்டுவதாகவும் அமைவதே சொல்வன்மையாகும்.
“
உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே.” –தொல்காப்பியம்.
சொல்லின் பொருளை உணர்தல், சொல்லைக்
கேட்போர் அறிவினைப் பொறுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக