திருக்குறள்
– சிறப்புரை : 660
சலத்தால்
பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர்
பெய்துஇரீஇ யற்று.--- ௬௬0
நேர்மையற்ற முறையில் பொருள் ஈட்டி அதனைப் பாதுகாத்தல் என்பது பச்சை மண்
பானயில் நீரை ஊற்றிப் பாதுகாப்பது போலாகும்.
“
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள்
இலான் குடியே போல் தமியவே தேயுமால்.” –கலித்தொகை.
உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக்குவித்த செல்வங்கள், மக்களப்
பாதுகாக்க முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்..
நன்று.
பதிலளிநீக்கு