ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 641

திருக்குறள் – சிறப்புரை : 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.----- ௬௪௧
நல்லன கூறும் நா வன்மை என்னும் சிறந்தசெல்வம், நா நலம் என்று  சொல்லப்படுகின்ற  அந்நலம், எந்நலத்துள்ளும் அமையாது, தனித்து நிற்கும் மேம்பட்ட சிறப்புடையதாகும்.
“ மாசில் பனுவல் புலவர் புகழ் புல
நாவில் புனைந்த நன் கவிதை.” ---பரிபாடல்.
குற்றமில்லாத நூற்கேள்வியினை உடைய நல்லிசைப்  புலவர்கள், புகழப்படும் அறிவினை உடைய தம் நாவாலே பாடிய நல்ல பாக்கள்.


1 கருத்து: