திருக்குறள்
– சிறப்புரை : 661
வினைத்திட்பம்
என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய
எல்லாம் பிற.---- ௬௬௧
ஒரு செயலைச் செய்து முடிக்கும்
வல்லமை என்பது ஒருவனின் மன வலிமையே ! ஒரு செயல்
முற்றுப்பெற முன்னிற்பது மன உறுதி ஒன்றே ; பிற செயல் திறன்கள் யாவும் பின்னிற்பவையே.
“
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது
உயர்வு.—குறள்.595.
நீர் நிற்கும் நிலைக்கேற்ப, நீர்ப்பூக்களின் தண்டு நீண்டு இருக்கும் அதுபோல
மக்களின் உள்ள ஊக்கத்தின் அளவே அவர்தம் உயர்வும் அமையும்.
நன்று.
பதிலளிநீக்கு