ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 647

திருக்குறள் – சிறப்புரை : 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. ------ ௬௪௭
கருத்துரைக்கும் வல்லமை; சோர்வு இல்லாமை ; ஆன்றோர் அவைக்கு அஞ்சாமை ஆகிய திறமைகளைக் கொண்ட ஒருவனைக் கருத்து மாறுபாட்டால் வெல்வது என்பது யார்க்கும் அரிதாம்.
“பெற்றான் ஒருவன் பெருங் குதிரை அந்நிலையே
கற்றான் அஃது ஊருமாறு.”--- நாலடியார்.

ஒருவன் ஒரு குதிரையைப் பெற்றானாயின், அப்பொழுதே அவன் அதில் ஏறிச் செல்லும் வழியையும் கற்றுக்கொண்டவனாகிறான்

1 கருத்து: