திங்கள், 4 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 642

திருக்குறள் – சிறப்புரை : 642
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. ---- ௬௪௨
ஒருவனுக்கு, மேன்மையும் கேடும் சொல்லும் சொல்லால் வந்துசேர்வதால் சொற்குற்றம் வாராமல் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.
” ஒன்று மொழிக் கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.” ---குறுந்தொகை.

தலைவி…! நீ, தலைவனை அடைய விரும்பினால், சொல் உறுதிமிக்க கோசரைப் போலச் சிறிது வன்கண்மை உடைய சூழ்ச்சியும் வேண்டும். – தோழி.

1 கருத்து: