திருக்குறள்
– சிறப்புரை : 655
எற்றென்று இரங்குவ
செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை
நன்று.
--- ௬௫௫
இப்படி ஒரு செய்லைச் செய்துவிட்டோமே என்று வருந்தும் அளவுக்கு எந்த ஒரு
செயலையும் செய்யக்கூடாது ; அப்படிச் செய்துவிட்டால் மீண்டும் அப்படிப்பட்ட ஒரு செயலைச்
செய்யாதிருத்தல் நன்று.
“முடிவும்
இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.”
---குறள். 676.
ஒரு செயலை முடிக்கும் வகையும் வரக்கூடிய இடையூறும் முடிக்கும்போது கிடைக்கும்
பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செயல் புரிய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக