திருக்குறள்
– சிறப்புரை : 640
முறைப்படச்
சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ
தவர்.----
௬௪0
திறமை இல்லாதார், ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழிமுறைகளை நன்கு அறிந்திருந்தபோதும்
நிறைவாகச் செய்து முடிக்க இயலாது அரைகுறையாகச் செய்து முடிப்பர்.
”
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு
இளிவு தலைத் தரும்.” ---நற்றிணை.
தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது, இடையில் நிறுத்திவிடுவது, இழிவைத்தருவதோடு, அறியாமையையும் வெளிப்படுத்தும்.
நன்று.
பதிலளிநீக்கு