தன்னேரிலாத தமிழ்---120
இமயம்
வடதிசை யதுவே வான் தோய் இமயம்
கழை
வளர் இமயம் போல- 166
மூங்கில் வளரும் இமயம் போல
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப்.
11: 23 – 25
ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும்
அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள்
செருக்கித் திரிவோரைப் போரிட்டு அழித்து வென்றவனே. ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )
கங்கை யாறு
வளமழை மாறிய என்றூழ்க் காலை
மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
பெருஞ்சித்திரனார், புறநா.161 : 5 - 7
மழை நீங்கிய கோடைக் காலத்தில் மன்பதை எல்லாம் சென்று
நீருண்ணற்குக் காரணமான கங்கை பெரு வெள்ளத்தைப் போல ...
கங்கையை ஏன் பாடினார் ?
வட இமயம் தென்
குமரி
ஆரியர் துவன்றிய
பேரிசை இமயம்
அமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரும் புகழ் உடையதுமான இமய மலைக்கும் – தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் – செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு
தென் அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.
குமட்டூர்க் கண்ணனார்.
பதிற்.11: 23 - 25
எதிர்நின்று பொருது வென்றாய். பண்டைய தமிழ்நாட்டின்
எல்லை அறிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக