தன்னேரிலாத தமிழ்----130
பகுப்பு முறை : நாள் பகுப்புமுறை
-தொல்காப்பியம்
ஞாயிறு
நாள் பகுப்புமுறையில் சூரியனே முதற் காரணி.
பகல் . இரவு ஞாயிற்றைக் கொண்டே
கணக்கிடப்படுகிறது. “ எல்”
என்னும் பழந்தமிழ்ச்சொல் சூரியனைக் குறிக்கும். எகரத்திரிபினால் எல் – ஒல்,
ஒர் என
நின்று இலத்தீனில்
Orior கிரேக்கத்தில் or-numi -
எழுகின்றேன் என
வந்தது. முந்திய மொழியில் oriens
என்பது எழுவான்
– உடன் சொல்லிலும்பொருளிலும் ஒப்புமையுடையதாகின்றது.ஒல் என
மாறிய எல்
அடியே இலத்தினில் sol என ஸகர மெய்முதலோடு
பயின்று எமது
எல்லை(சூரியனைக்) க்காட்டும். என்கிறார்
சுவாமி ஞானப்பிரகாசர்.
பொழுது கணக்கிற்குத்
தமிழே (எல்) அடிப்படை என்பது
இனிது விளங்கும்.
இந்தியக்
காலக் கணித
ஆசிரியர் எல்.டி.
சாமிக்கண்ணுபிள்ளை “ இந்தியவிலுள்ள
மற்றைப் பகுதியினர்
மாத்திரம் சாந்திமான
கணனப்படி நடக்க,
தமிழர் மாத்திரம்
செளரமான கணிதத்தை
(
சூரிய கதியைக்
கொண்டு காலம்
கணிக்கும் முறை)
விடாது பற்றிக்கொண்டிருப்பதால் அவர்கள்
வழக்கு வெகு
புராதனமானது என்று
கொள்வதற்கு இடம்தருகிறது.”
என்கிறார்.
கயே
( G.R.Kaye) என்பவர் தாம்
எழுதிய இந்திய
வானசாஸ்திரம் என்னும்
நூலில் (Memoirs of the Archaeological survey of
India, No.18 ) “ “வேத
காலத்திலும் அதன்
பிற்காலத்திலும் கிறிஸ்து
சகாப்தத்தின் முதல்
நூற்றாண்டுவரையில் இந்திய
நாட்டு வானசாஸ்திரம்
வெளிநாட்டுச் சார்பு
இல்லாமல் இருந்தது”
என்று தெளிவாக்கியுள்ளார்.
பகல் x இரவு
“ கி.மு
1600க்கு முன்பே
பாபிலோனியர் 60 என்ற
எண் அமைப்பைக்
கொண்டு 60 நிமிடங்கள் ஒரு மணி
என்றும் 60 x 6 = 360 டிகிரி
ஒரு வட்டம்
என்றும் குறித்தனர்.”
பாபிலோனியரின் இக்கணக்கைக்
கிரேக்கர்கள் பெற்றுக்கொண்டனர் என்பர்.
பாபிலோனியர் 60 என்றது
6 x10 = 60 எனக்கொண்டனர் (விளக்கம்
விக்கிபீடியாவில்) தொல்பழங்கால
மக்களிடையே
( எகிப்து, சுமேரியா, இந்தியா, சீனா) நாள் பகுப்பு
– பகல், இரவு என்றும் சூரியன்
எழும் விழும்
காலத்தைக் கணக்கிட்டுப்
பகல் 12 மணி, இரவு 12 மணி என்றனர். 12 என்பது திங்கள் சுற்றைக்
குறிக்கும். இப்பகுப்பு
முறை தமிழ்
நிலத்திற்கும் உரியதே. “ தோற்றம் சால் ஞாயிறு
நாழியா வைகலும்
– கூற்றம் அளந்து
நும் நாள்
உண்ணும் ,” ( நாலடியார். 7.) தமிழர்கள் ஞாயிற்றின் இயக்கத்தைக்
கொண்டு பன்னிரு ஓரைகள்
வகுத்தனர். இக்கணக்கின்படி 1/12,
1/12 = ஒரு பகல்
ஓர் இரவு
- ஒரு நாள், 1/24 ; 24இல்
ஒருபகுதி – ஒரு மணி.
பாபிலோனியர் இதை
ஹோரா என்று
குறிப்பிட்டனர். ஹோரா
என்பதே ஹவர் ( Hour) என்றாயிற்று.
கிரேக்கம் – Hora – Hour
சமற்கிருதம் – Hora – Hour
இலத்தின் – Hora –
Hour
ஆங்கிலோ பிரஞ்சு
– Ore – Hour - ஒறே
பழைய பிரஞ்சு
– Ure,Ore ( From Latin Hora) உறே / ஒறே
இடைக்கால ஆங்கிலம்
- Ure – உறே……தொடரும்….
அரிய செய்தியைக் கொண்ட பதிவு. நன்றி ஐயா.
பதிலளிநீக்கு