திங்கள், 24 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----138

 

தன்னேரிலாத தமிழ்----138

மாநிலம் இயலா முதன்முறை அமையத்து

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனொடு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே

--கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 91 – 94

ஆதி ஊழியின்கண் நீரினூடே பெரிய நிலம் தோன்றாத காலத்தேஅச்சந்தரும் அப் பெரிய வெள்ளத்தின் இடையே தோன்றியதும்  வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரமனோடு மலர்ந்ததுமாகிய உந்தித் தாமரையை உடையோனே ! நினது நேமியே உலகிற்கு நிழலானது.

1 கருத்து: