தன்னேரிலாத தமிழ்----134
வெற்றிடம்
கரிய கடல் சூழ்ந்த இப்பெரிய நிலவுலகத்தை….
மயங்குஇருங்
கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
மார்க்கண்டேயனார்,
புறநா. 365 : 1-3
தம்மிற் கலந்து மழை, மின்னல் முதலியவற்றின் தொகுதியை உடைய விசும்பை முகனாகவும் விசும்பின்கண் இயங்கும்,
ஞாயிறும் திங்களும் ஆகிய இருசுடர்களைக் கண்ணாகவும் கொண்ட , பலவகையாலும் மாட்சிமைப்பட்ட நிலமகள், இடம்விட்டு இடம்
பெயரும்காற்று இயங்காத உயிர்களின் இயக்கம் அற்ற விசும்பைக் கடந்து.,.. நிலமகளுக்கு விசும்பு முகம் ; இருசுடர்கள் கண்.
மேகத்திற்கும் அப்பால் காற்று இயங்காத வெற்றிடத்தை ‘வளியிடை வழங்கா’ என்று மிகத்தெளிவாகப் புலவர் சுட்டுகின்றார்
விசும்பு
மழைகால் நீங்கிய மாகவிசும்பில்
நக்கீரர். அகநா. 141: 6
மாகம் – ஆகாயம்;
விசும்பு – ஆகாயம் எனவே மாகவிசும்பு என்பது ஒரு
பொருட்பன்மொழி ; மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடு
(பரிபா. 1:47) என்பார் பரிமேலழகர். திக்குகளை உடைய ஆகாயம் (மதுரைக்.454.) என்பார் நச்சினார்க்கினியர்.
மாகம் விசும்பு என்னும் இரு சொற்களும் ஆகாயம் என்னுமொரு பொருளையே
தருமென்றாலும் நக்கீரர் மாக விசும்பு என்னும் இரண்டு சொற்களை ஒரு பொருள்(ஆகாயம்) குறிப்பதை உணராது கூறினார் என்று
கூறுதற்கு இடமில்லை. விசும்பின் துளி வீழின் அல்லால்
(குறள்.16) மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது
– என்று விசும்பு – மேகம் என்று பொருளுரைத்தார்
பரிமேலழகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக