சனி, 8 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----122

 

தன்னேரிலாத தமிழ்----122

புற அறிவியல்

மனித சமுதாயத்தின் புறத்தேவைகளைப் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் இயக்கி வருவது.  புற அறிவியலில் நிலையான கண்டுபிடிப்பு என்று எதுவும் இல்லை ; இன்றைய கண்டுபிடிப்புகள் நாளை வழக்கொழிந்து விடுகின்றன. புற அறிவியலின் அசுரத்தனமான வளர்ச்சி  இயற்கையின் இயல்பை மாற்ற முயல்கிறது

இயற்கை, செயற்கையாகிய  அறிவியலால் சிதைக்கப்படுகிறது. இன்று புற அறிவியல்  அனைத்து உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. வானும் மண்ணும் நிலமும் நீரும் வளியும் வாழ்வும் இன்று மாசடைந்துள்ளன

இயற்கையின் மீது புற அறிவியல் தொடுத்த ஆதிக்கப் போர்,  உயிரினங்களைப் பேரழிவை நோக்கிச் செலுத்துகிறது. உலக உருண்டை உள்ளங்கையில் வந்துள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் வானூர்தியோ, கைப்பேசியோ இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; ஒழுக்கமின்றி வாழ்தலாகாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக