திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----131

 

தன்னேரிலாத தமிழ்----131

பகுப்பு முறை : நாள் பகுப்புமுறை

 -தொல்காப்பியம்

தமிழர் வழக்கு

 பாபிலோனியரின் காலப் பகுப்பு எண்ணியல் முறை, தமிழர்களின் எண்ணியல் முறையோடு நெருங்கிய உறவுடையதாகத் தெரிகிறது. பண்டைத் தமிழரின் வானியல் அறிவியல் வானியலோடு தொடர்புடைய வேளாண்மைத் தொழிலில் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

 தமிழர் வழக்கில் 1, 12, 24, 60. 360 ஆகிய எண்கள்

360 நெல் -  1 செவிடு

4 செவிடு – 1 ஆழாக்கு

2 ஆழாக்கு – 1 உழக்கு

4 உழக்கு – 1 நாழி

 8 நாழி ( 4 படி) – 1 மரக்கால்

12 மரக்கால் – 1 கலம்

24 மரக்கால் – 1 மூட்டை

 60 மரக்கால் ( ஐந்து கலம்) – 1 உறை

 இவ்வளவைகளுள் செவிடு, நாழி, உறை, முகத்தலளவைக்கு மட்டுமின்றிப் பொழுதறிதலோடும் தொடர்புடையதாகும் 360 நுண்ணளவு. ஒரு நாளுக்கு 60 நாழி (நாழிகை) ஒரு நாழி 24 நிமிடங்கள்,(21/2  நாழிகை = ஒரு மணி நேரம் / ஓரை. ஒருநாள் = 60 நாழிகை =  24 மணி நேரம்.) முகத்தளவையுள் நாழி என்பது அளந்து கூலிதரும் கூலி, உறை என்பது பேரளவுக்கு (60) அடையாளமாக விடும் சிற்றளவுக்குறி என்று விளக்கம் தருகிறது பேரகரமுதலி.

உறைஓரை

               ஹோரா, ஓரையா.. ? உறை, ஹோராவா..? என்பது ஆய்விற்குரியது. ஓரை என்ற சொல் தமிழில் இருபொருள் பயக்கிறது.

1.   ஓரைஇராசி, முகூர்த்தம் (மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் .நூற்பா உரை.- இளம்பூரணர், நச்சினார்க்கினியர்)

2.   ஓரைமகளிர் விளையாட்டு -  மகளிர் வட்டமாக நின்று ஆடும்  ஆட்டம்.

3.   உறைவட்டமான- கிணற்றின் அடியில் வைக்கும் மர வளையம்; உறைக்கிணறு -  கிணற்றில் மண் சரிந்து விழாமல் இருக்க சுடுமண் வளை உருளை.

                     ஹோரா , விளையாட்டு / நடனம் என்று குறிக்கப்படுகிறது. வட்டமாக நின்றாடும் இம்மகளிர் விளையாட்டில் பன்னிருவர் அல்லது  இருபத்துநான்கு மகளிர் இருப்பரர்களா என்பதையும்  அவ்விளையாட்டுஎந்த நாளில் ஆடப்படுவது என்பதையும் ஆராய்தல் வேண்டும்.

தொல்காப்பியர் கூறும் நொடி – 1/60 எனக்கொண்டால்

  60 நொடி = 1 நிமிடம்

60 மரக்கால் (நிமிடம்) =1 உறை (Hour)

உறை என்னும் சொல்லே , உறே, ஒறே,  என்னும் தமிழ்ச் சொல்லே ஹோரா என்று சுமேரியரிடையே சென்று சேர்ந்து உலகம் முழுதும் பரவியிருத்தல் வேண்டும்….தொடரும்…..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக