வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----127

 

தன்னேரிலாத தமிழ்----127

அகத்திணை - புறத்திணை

அகம் - புறம்சொற்பொருள் விளக்கம்

அகம்

அகம் என்றதன் பொருளாவது

 ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததால் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஒரு ஆகுபெயராம்.”

புறம்

புறம் என்றதன் பொருளாவது

இதனை ஒழித்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குத் துய்த்துணரப்படுதலானும் இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவேபடும்.”

                மேற்சுட்டிய அரும்பொருள்கள் வழி அறியப்பெறுவன ….  பொருள் இலக்கணவிளக்கமும் அகம் என்றதும் புறம் என்றதும் எத்தன்மையன என்றுஉலகம் தட்டை என்ற காலத்துக்கு முன்னும்; உலகம் உருண்டை என்ற உண்மை அறிந்த காலத்துக்கு முன்னும் ; உலகம்  உருவம் பெறாக் காலத்து, சூரியனின் இயக்க ஆற்றல் அறிந்து, உலகியல், வாழ்வியல், உளவியல் ஆகிய அறிவியல் துறைகள்சார்ந்து நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆராய்ந்து தொல்காப்பியர் தோற்றிவித்த தொன்மை அறிவியல் கருவூலம் தொல்காப்பியம் என்க. தொடரும்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக