தன்னேரிலாத தமிழ்----121
அக அறிவியல்:
மனித சமுதாயத்தின்
அகவாழ்க்கைச் சார்பானது
மண்ணில் நல்ல
வண்ணம் மக்கள்
வாழ்வதற்கான நெறிமுறைகளைக்
கூறுவது; இப்படித்தான் வாழவேண்டும் என்பதை
வரையறுத்துக்கூறுவது.
பிறப்பால் பேதமுறாது;
வளர்ப்பால் வழி
தவறாது; இல்லறத்தால் உறவு மாறாது..!
யாதும் ஊரென யாவரும்
உறவென இயற்கையோடியைந்து வாழ வற்புறுத்துவது.
வளமான வாழ்க்கை நலமுடன்
விளங்க ஓரறிவு
முதல் ஆறறிவு
ஈறாக அனைத்து
உயிர்களும் இயற்கை
அன்னையின் மடியில்
இன்புற்று இயைந்திருக்க
– இயங்க அறம்
பல வகுத்துரைப்பது.
அக அறிவியலின்
அடிப்படை ஒழுக்கமுடைமையே.
ஒழுக்கமின்றி மனித
சமுதாயம் வாழமுடியாது
; வாழவும் கூடாது
இஃது எக்காலத்திற்கும் பொருந்தும் அறிவியலாகும். ஒருவன்
ஒருத்தி எனும்
கற்பொழுக்க வாழ்க்கைமுறைப் புற அறிவியல் வளர்ச்சியால்
புறந்தள்ளமுடியாத அக
அறிவியலாம்.
பிறப்பு முதல்
இறப்பு வரை
அனைத்தையும் தனிமனிதத்தன்மை சார்ந்தும் சமுதாயம் சார்ந்தும்
வாழ்வியலின் அனைத்து
நிலைகளையும் அறிவியல்
நோக்கில் ஆராய்ந்து
எடுத்துரைப்பதே அக
அறிவியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக