வியாழன், 27 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----141

 

தன்னேரிலாத தமிழ்----141

 தொல்காப்பியர் உயிர்களின் பரிமாண வளர்ச்சியை வளப்படுத்தியுள்ளார். இவர் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துள்ளார். இப்பகுப்புமுறை புலனறிவு அடிப்படையில் அமைந்து-  இன்றைய அறிவியல் கொள்கையோடு பெரிதும் ஒத்துள்ளதை அறியமுடிகிறது.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே  (புல். மரம் முதலிய இவ்வினம்தொடு உணர்வு  - அறிவு)

இரண்டறி வதுவே அதனொடு நாவே(  நத்தை. சிப்பி முதலிய இவ்வினம்-தொடு உணர்வோடு சுவை உணர்வும்)

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே (  கறையான். எறும்பு முதலிய இவ்வினம் - தொடு.சுவை. நுகர்வு உணர்வுகள்)

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ( வண்டு . தும்பி. முதலிய இவ்வினம் - தொடு .சுவை. நுகர்வு. கண்- பார்வை உணர்வுகள்)

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ( விலங்குகள் . பறவைகள் முதலிய இவ்வினம் - தொடு.சுவை. நுகர்வு. பார்வை. செவித்திறன் உணர்வுகள்)

ஆறறி வதுவே அவற்றொடு மனனே  ( மேற்சுட்டிய ஐந்து உணர்வுகளோடு மனம் என்னும் உணர்வும் அமையப் பெற்றவை மக்களும் பிறவும். –                                          தொல்காப்பியர் உயிரினங்களை அறுவகையாகப் பகுத்தார்விலங்கியலார் பன்னிரண்டு வகையாகப் பகுத்துள்ளனர்.

     --தொல்.1526.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக