புதன், 26 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----140

 

தன்னேரிலாத தமிழ்----140

 

 விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்

நானிலம் துளக்கு அறமுழு முதல் நாற்றிய

பொலம் புனை இதழ் அணிமணி மடற்பேர் அணி

இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி

மூஉரு ஆகிய தலை பிரி ஒருவனை

--நல்லெழுனியார்.பரிபா. 13 : 32 - 37

                         பகைவருடைய மார்பை உழுகின்ற வளைந்த வாயினை உடைய கலப்பையைப் போர்க் கருவியாக ஏந்தியவன் பலராமன்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என நான்கு நிலத்தில் வாழும் உயிர்களின் நடுக்கம் தீருமாறு அந்நிலவுலகைக் கடலிலிருந்து வெளியா நெம்பிக் கொண்டுவரஆண்பன்றியாக உருக்கொண்டனன்.

                    முன்னொரு காலத்திலில் இரணியாட்சகன் என்ற அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் ( ஊழிக் காலத்தே) கடலினுற் கொண்டுபோக, பெருமான் வராக (பன்றி) உருக்கொண்டு  - கொம்பால் குத்தி உலகை வெளிக்கொணர்ந்தார்.

                                   ( இப் புராணக் கதை உணர்த்தும் உண்மையை அறிதல் வேண்டும். பாய் போல் திரண்டு எழுந்த அலைகள்கடல் கோளாக உலகை அழித்ததுபின்னர் உலகம் தோன்றியது எனலாம் . – சரியான அளவுடைய நெம்பு கோலும் ஆதார இடமும் கிடைக்குமானால் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுவேன் என்றார் ஆர்க்கிமிடிஸ் . ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக