தன்னேரிலாத
தமிழ்-184.
“ ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல்
குறுமகள்
நறுந்தண் நீரள் ஆர் அணங்கினளே
இனையள் என்று அவள் புனை
அளவு அறியேன்
சில மெல்லியவே கிளவி
அனைமெல்லியள் யான் முயங்குங்
காலே.”-----குறுந்தொகை, 70.
தலைவியின் வலப்புறத்தும்
இடப்புறத்தும் ஒடுங்கியும், நடுவில் நேராகவும் வகிர்ந்த கூந்தலையும், ஒளியுடைய நெற்றியினையும்
உடைய இளையளாகிய தலைவி, நறுமணமும் குளிர்ச்சியும்
தனக்குரிய இயல்பாகக் கொண்டவள். ஆயினும் பிரிந்த காலத்தில் எனக்குப் பொறுத்தற்கு அரிய வருத்தத்தைத்
தருபவளாக உள்ளாள். அவளுடைய சொற்கள் சிலவாகவும்
மென்மை உடையனவாகவும் உள்ளன. அவளை, யான் தழுவும்போது அத்தகைய மென்மை உடையவளாக விளங்குகிறாள். அவள் இத்தகையவள் என்று
புனைந்துரைக்கும் எல்லை அறியேன். –தலைவன், தன் நெஞ்சிற்குக் கூறியது.
புனைந்துரைக்கும் எல்லை....ரசித்தேன் ஐயா.
பதிலளிநீக்கு