சனி, 5 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-188.

 தன்னேரிலாத தமிழ்-188.

பலரும் கூறுக அஃது அறியாதோரே

அருவி தந்த நாட்குரல் எருவை

கயம்நாடு யானை கவளம் மாந்தும்

மலைகெழு நாடன் கேண்மை

தலை போகாமை நற்கு அறிந்தனென் யானே.” ---குறுந்தொகை, 170.

அருவியால் தரப்பட்ட காலத்தில் விளைந்த, பூங்கதிர்களுடன் விளங்கும் கொறுக்கான் தட்டையைக் கோடைக்காலத்தில் நீர் வேட்டு, ஆழமான நீர்நிலையைக் கண்டறிய விரும்பிச் சென்ற யானை, அதனைக் கவளமாக உண்ணும். இத்தகைய மலைநாடனது நட்பு, முதலில் நின்று பின் நீங்காமையை  யான் நன்கு அறிந்தனன், பிறர் அறிந்திலர். தலை நாளன்ன எம் நட்பை அறியாத பலரும் கூறுவன கூறுக.-தலைவி, தோழிக்குக் கூறியது.தன்னேரிலாத தமிழ்-188.


1 கருத்து: