தன்னேரிலாத
தமிழ்-200.
“ மாலை நீ ஈரமில் காதலர் இகந்து அருளா இடம்
நோக்கிப்
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்
ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ..!” -----கலித்தொகை, 120.
மாலைப் பொழுதே…! நீ, அன்பு இல்லாத காதலர் விட்டு நீங்கி,
அருள் செய்யாத காலம் பார்த்துப் போரிலே தோல்வி உற்றாரை, அவர்பட்ட தோல்வியை இகழ்ந்து சிரிப்பாரைப் போலப் பொறுத்தற்கரிய வருத்தமுற்ற
என்னை, வருத்துதற்கு வந்தனையோ..? நீ,
கொடிய மாலைப் பொழுதாக இருந்தனையே..! –கண்டார் கூற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக