தன்னேரிலாத தமிழ்-199.
“ எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்
துள்ளூ தாவியற் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து
இதுகொல் வாழி தோழி என்னுயிர்
விலங்கு வெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே.” –அகநானூறு, 71.
தோழி….!
செம்மையாக இயற்றப் பெற்ற உருவங் காணும் கண்ணாடியின் முன்னே, ஊதிய ஆவி முன் பரந்து, பின் சுருங்கினாற் போல,
என் வலிமை சிறிது சிறிதாகக் குறைந்து, மாய்தல் வேண்டி நிற்க, கடிய சூறைக்காற்று அலைப்ப,
அசையும் மரத்திலுள்ள பறவை போல,
யானும் மிகவும் அழிவுற்று , என் உயிர் இவ்வுடலைத்
துறந்து செல்லும் காலம்
இதுவே போலும். தோழி, தலைவிக்குச் சொல்லியது.
என் உயிர் இவ்வுடலைத் துறந்து செல்லும் காலம் இதுவே போலும்....என்ற உணர்வின் வெளிப்பாடு அருமை ஐயா.
பதிலளிநீக்கு