தன்னேரிலாத
தமிழ்-193.
“ செய்வினைக்கு அகன்ற காலை எஃகுற்று
இருவே
றாகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக் காண் தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான்… …..” ---- அகநானூறு, 29.
பொருளீட்டும்
வினைக்குப்
பிரிந்து
சென்ற காலத்தே, கத்தியால்
அறுக்கப்பெற்று, இரு பிளவாகிய
விளங்கும்
வனப்பினையுடைய
மாவின் நறிய வடுப்போலக் காணும்தொறும் களிப்பு மேவுதல் குறையாத பார்வையினையுடைய
மையுண்ட கண்களை, நினையாது
கழிந்த நாளில், யான் சிறிதும்
உயிர் தரித்திரேன்
எனத் தெளிவித்து
நின்றதை நினைவுகூர்ந்தான்
தலைவன். – தோழி, தலைவன் கேட்பச் சொல்லியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக