வெள்ளி, 4 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-187.

 

தன்னேரிலாத தமிழ்-187.

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்

கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர் எனத்

தாள் வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்

நாளிழை நெடுஞ் சுவர் நோக்கி நோய் உழந்து

ஆழல் வாழி தோழி….” ------அகநானூறு, 61.

 தோழி வாழி ….!  தலைவர் பிரிந்த நாளைக் குறித்து வைத்த நீண்ட சுவரினை  நோக்கிச்  சென்ற நாட்களை எண்ணி உணர்ந்து, வருந்தித் துன்பத்து ஆழ்ந்திடாதே !  கூற்றம் கொள்ள இறக்காமல், பிறர் தம் பொருளைக் கொள்ளும்படி இறந்தோர் உறுதியாகப் பேறு பெற்றோராவர், என வற்புறுத்தி, ஊக்கத்தோடு வெற்றிபெறச் சேண் நிலத்தே வினைவயிற் பிரிந்தார். –தோழி, தலைவிக்குச் சொல்லியது.

1 கருத்து: