தன்னேரிலாத
தமிழ்-185.
“தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார் நீ வருநாள் போல் அமைகுவம்
யாம் புக்கீமோ
மாரிக்கு அவாவுற்றுப் பீள்வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆராத் துவலை அளித்தது போலும் நீ
ஓர் பாட்டு ஒருகால் வரவு. “-------கலித்தொகை, 71.
தலைவ…!
நின் இடைவிடாத முயக்கத்தைப் பெற்று இன்புறும் பரத்தையரைப் புலப்பவர் யார்..? ஓர் யாண்டுக்கு
ஒரு முறை வருகின்ற நின் வரவு, பெருமழைக்கு விரும்பி வாடிய நெற்பயிருக்குச்
சிறு தூறல்கள் என்ன பயனைத்தரும்..?
வெப்பத்தைக் கிளப்பிவிட்டு அதிக துயரத்தைத்தானே தரும். நின் வரவும் அதிக வருத்தத்தைத் தருவதாகும். ஆதலான் நீ
முழுதும் மனந்திருந்தி வரும்வரையும் யாம் ஆற்றியிருப்போம்…! –காமக்கிழத்தி கூற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக