திங்கள், 7 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-190.

 

தன்னேரிலாத தமிழ்-190.

யானை வவ்வின தினையென நோனாது

இளையரும் முதியருங் கிளையுடன் குழீஇச்

சிலையாந்து திரிதரும் நாடன்

நிலையா நன்மொழி தேறிய நெஞ்சே.” ----அகநானூறு, 348.

யானைகள் தினைப்புனத்தைக் கவர்ந்து உண்டனவாக, அதனைப் பொறாது, இளையரும் முதியருமாகிய சுற்றமெல்லாம் ஒருங்கே கூடி, வில்லை ஆராய்ந்துகொண்டு திரியும் நாட்டை உடையோனாகிய நம் தலைவனது, உறுதியில்லாத  இனிய சொல்லை, உண்மையெனத் தெளிந்த நெஞ்சமே, இனி என்னாவது ? –தோழி சொல்லெடுப்பத் தலைவி கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக