வியாழன், 10 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-192

 தன்னேரிலாத தமிழ்-192. 

ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே ஓர்

வல்லவன் தைஇய பாவை கொல் நல்லார்

உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள் கொல் வெறுப்பினால்

வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம் கொல்….”கலித்தொகை, 56.

யான் நிற்கின்ற இவ்விடத்தே வருபவளாகிய இவள் யார்…? வல்லான் ஒருவனால் இயற்றப்பட்ட ஒப்பில்லாத பாவையோ…. ?அன்றி, படைத்தல் தொழில் வல்ல அயனால் நல்ல அழகிய மகளிருடைய உறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒருசேரக் கொண்டு வடிவாகப் படைக்கப்பட்டாள் ஒருத்தியோ….? அன்றி, ஆடவர் மேலுள்ள வெறுப்பினால்  தன்னைக் கூற்றம் என்று பிறர் அறியாதபடி, மறைத்துப் பெண் வடிவுகொண்டு வந்த கூற்றமோ..?-தலைவன் கூற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக