தன்னேரிலாத
தமிழ்-228.
“உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு
புகல்வது
அவர்
குற்றமே—வண்டுமலர்ச்
சேக்கை
விரும்பும்
செழும்
பொழில்வாய்
வேம்பன்றோ
காக்கை
விரும்பும்
கனி.” –
நன்னெறி,
24.
செழிப்பான
சோலையில்
மலர்களில்
தேன் அருந்துவதை
வண்டுகள்
விரும்பும் ; காக்கை வேப்பம் பழத்தை விரும்பும் ; அதுபோல, உலகில் ஒருவருக்கு
நல்ல குணம் இருந்தால்
உயர்ந்தோர்
அவரின் நல்ல குணத்தையே
பேசுவார்கள் ; ஆனால், தீயவர்கள்
நல்லவர்களிடம்
காணப்படும்
குற்றம் எதுவென்று
ஆராய்ந்து
அதனையே பேசிக் கொண்டிருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக