தன்னேரிலாத
தமிழ்-243.
“ அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும்
அழகும் வெற்றியும் தத்தம்
குடியும் மானமும் செல்வமும் பெருமையும்
குலமும் இன்பமும் தேசும்
படியு மாமறை ஒழுக்கமும் புகழுமுன்
பயின்றகல்வியுஞ் சேர
மடியு மால்மதி யுணர்ந்தவர் சூதின்மேல்
வைப்பாரோ மனம் வையார்.” –வில்லிபாரதம்,
11: 64.
அறிவுடையோர்
சூதாடுவதை
விரும்புவாரோ..? தலைமையும்
ஆண்மையும்
படையும் அழகும் வெற்றியும்
குடிப்பெருமையும்
மானமும் செல்வமும்
பெருமையும்
குலமும் இன்பமும்
புகழும் நான்மறை ஒழுக்கமும்
கற்றகல்வியும்
இன்ன பிற நற்பயன்கள் யாவும்
சூதினால்
அழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக