தன்னேரிலாத
தமிழ்-236.
“ ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாள் ஏல் என்றால் ஏலாய்-ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.” –நல்வழி,
11.
துன்பத்திற்கு வழியாகிய
உள்ள என் வயிறே..! ஒரு நாள்
உணவு உண்ணாமல் இருக்க மறுக்கிறாய், கிடைக்கின்ற காலத்து இரண்டு நாட்களுக்கான உணவையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய், என்னுடைய துன்பங்களை உணர்ந்துகொள்ளாமல் இருக்கும் உன்னுடன் வாழ்வது துன்பமே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக