புதன், 10 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-233.

 

தன்னேரிலாத தமிழ்-233.

செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத

புல்லறிவாளர் பெருஞ்செல்வம்எல்லில்

கருங் கொண்மூ வாய்திறந்த மின்னுப் போல் தோன்றி

மருங்கு அறக் கெட்டு விடும்.”—நாலடியார், 8.

யாம் செல்வர்என்று மகிழ்ந்து தாம் செல்லும் இடமாகிய வீட்டுலகைப் பற்றி எண்ணி நடக்காத சிற்றறிவினர் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம், கரிய இருள் பொழுதில், கருமேகத்தே தோன்றிய மின்னலைப்போல்  முன்னே இருந்த இடம் இதுதான்என்னும் அடையாளம் இல்லாமல் சிறுபொழுதில் அழிந்தொழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக