சனி, 6 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-230.

 

தன்னேரிலாத தமிழ்-230.

மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்

செம்மை ஒன்றின்மை துறவுடைமை நன்மை

திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன

அறம் பத்தும் ஆன்ற குணம்.” –அறநெறிச்சாரம், 177.

உண்மை, பொறுமை, மேன்மை, மேலான முயற்சி, அடக்கம், நடுவுநிலைமை, தனக்கென ஒன்று இல்லாமை,  பற்றுக்களைத் துறத்தல், நன்மையே செய்தல், மாறுபாடு இல்லாத உறுதிப்பாடு, ஆகிய இவ்வறங்கள் பத்தும் உயர்ந்தோர் குணங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக