வியாழன், 11 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-234.

 

தன்னேரிலாத தமிழ்-234.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு

இன்புறத்தான் உண்டல் இனிதாமே அன்பு உறவே

தக்கவரை யின்றித் தனித்து உண்டல்தான் கவர்மீன்

கொக்கு அருந்தல் என்றே குறி,---நீதிவெண்பா, 51.

ஒருவன் தனித்து உண்ணுதல்,  தான் கவர்ந்த மீனைத் தனியே அமர்ந்து தின்னும் கொக்கின் செயலை ஒத்தது ஆம். அவ்வாறு இன்றித் தென்புலத்தார்,தெய்வம், விருந்து, சுற்றம் ஆகிய நால்வரோடும்  இன்பம் உண்டாகும்படிச் சேர்ந்து உண்ணுதல்,நன்றாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக