திங்கள், 8 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-231.

 

தன்னேரிலாத தமிழ்-231.

திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்

 உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால்

 அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று

 எருத்து இறைஞ்சி நில்லாது மேல். “நாலடியார், 304.

 திருமகள் தன்னைக் கைவிட்டாலும் தெய்வம் சினந்து ஒதுக்கினும் சோர்வறாத மனத்தோடு, தன் சான்றாண்மையை நினைப்பதே அல்லாமல், செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்ற அறிவில்லார் பின்சென்று, மேலானவர்கள் தலை தாழ்ந்து நிற்க மாட்டார்கள்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக