வியாழன், 4 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-229.

 

தன்னேரிலாத தமிழ்-229.

பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி

மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார்மின்னுமணி

பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்

காணுங் கண் ஒக்குமோ காண்.” –நன்னெறி, 40.

பொன் போன்றவளே..! ஒளி விளங்கும் அணிகலன்களை அணிந்திருக்கும் உடல் உறுப்புகள் அணிகலன்களை அணியாமல் இருக்கும்  கண்ணுக்கு ஒப்புமையாகக் கூறப்படுவன அல்ல. அதுபோல, தன்னைப் பொன்னாலாகிய அணிகலன்களால் ஒப்பனை செய்துகொள்ளும் அரசர், அணிகலன்களை அணிந்து கொள்ளாமல் கல்வியையே அணிகலனாக அணிந்திருக்கும் சான்றோர்க்கு ஒப்பாகமாட்டார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக