ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-235.

 

தன்னேரிலாத தமிழ்-235.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்--- கூடுவிட்டிங்கு

ஆவிதான் போயின பின்பு யாரோ அனுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.” நல்வழி, 22.

புவியில் வாழ்கின்ற காலத்தில் உழைத்துச் சேர்த்த செல்வத்தைத் தானும் துய்க்காமல் பிறருக்கும் கொடுக்காமல் மண்ணில் புதைத்து வைத்துவிட்டு அலைந்து  அழியும் தன்மை கொண்ட மக்களே..! உங்கள் உடலைவிட்டு உயிர் பிரிந்த பின்பு, நீங்கள் புதைத்து வைத்த செல்வத்தைத் துய்ப்பார் யாரே..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக