ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-52.- ஓர் அறிவியல் அறிஞர்.
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)
”தொல்காப்பியம் புள்ளி:
எண்கள் குறியீடுகள் :
ஒன்று, இரண்டு, மூன்று என்பதற்கான குறியீடு 1,2,3, இவை தவிரக் கூட்டல், கழித்தல், பெருக்கல் முதலியவற்றிற்கும் +, _, ்ஷ் குறியீடுகள் இருக்கின்றன. எந்தான் முதலில் தோன்றியது என்றும் பின்னரே அது எழுத்து வடிவம் பெற்றது என்றும் கூறுவர்.
ஒன்று என்பதே ஒரு விரலைத் தூக்கியதன் வழி உருவானது என்பர் ( Lifted Finger –1.) இரண்டு, இரண்டு விரல்கள். இம்முறை சுமேரியர்கள், பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் என்றவாறு இடம்பெயர்ந்துள்ளது. மிகத் தொன்மையான எண் குறியீடுகள் சீனாவில் காணப்படுகின்றன. 1, 11, 111, 1111, 11111, - 10, =20, 90 வரை இவ்வாறு நேர்க்கோடு, கிடைக்கோடு வழி எண்களைக்குறித்தனர். இக்கோடுகளே திரிந்து 1,2,3, என்ற உருவத்தைப் பெற்றதென்பர். தமிழிலும் கோடுகளை எண்ணி நாட்களை எண்ணும் முறையை அகநானூறு 289ஆம் பாடல் காட்டுகின்றது. தமிழ் ீஎண்களில் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களைப் (சிறிது மாற்றி) பயன்படுத்துகின்றனர். , க, உ, ங, ச, ரு, எ, அ, க, ய. (1,2,3,4,5,6,7,8,9,10.) கி.மு. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டளவில் எண் வடிவம் -- (1), =(2) + மேற்கோடு (3) + (4) இவ்வாறு இருந்தது.
தமிழர்களைப் போலவே கிரேக்கர்களும் நெடுங்கணக்கில் உள்ள முதல் பத்து எழுத்துக்களையும் பத்துவரை உள்ள எண்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர். எழுத்துக்கள் எண்களை உணர்த்தும்போது மட்டும் சிறு குறி இடம் பெறும்(...K = 20. A= 30.)
தமிழில் அறிவியல் உட்பட அனைத்தும் செய்யுள் வடிவிலேயே எழுதப்பட்டதால் எண்களையும் எழுத்தால் எழுதினர், தொல்காப்பியர் காலந்தொட்டே... 1. ஓர்,ஒரு, ஒன்று, ஒன்றன்; 2. ஈர், இரு, இரண்டு ; 3. மூ, மூன்று. ; 4. நா, நால், நான்கு. ; 5. ஐ, ஐந்து. என எண்கள் ஓரிரு எழுத்துக்களினால் சுட்டப்பெற்றது எண்குறிப்பதற்கு இணையாகும். பேரெண்கள் : தொல் தமிழகத்தில் பேரெண்களைக் குறிக்கக் குறியீடுகள் இருந்தன. தொல்காப்பியர் ...
“ஐ அல் பல் எனவரூஉம் இறுதி
அல்பெயர் என்ணினும் ஆயியல் நிலையும் (393)
எனப்பேரெண்களைச் சொல்லால் குறித்துள்ளார். ”நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும்.” எனப் பரிபாடல் குறிக்கும்.
கும்பம் - ஆயிரங்கோடி ; கணிகம் - பத்தாயிரம் கோடி ; தாமரை கோடா கோடி, ; சங்கம் - பத்துக் கோடாகோடி. ; ஆம்பல் - ஆயிரம் கோடி கோடி. ; பரதம் - 1இன்பின் 24 சுழிகள் கொண்டது. ...........................தொடரும்.................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக