புதன், 29 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-50.- ஓர் அறிவியல் அறிஞர்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-50.- ஓர் அறிவியல அறிஞர.  

ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.) 

 தொல்காப்பியம் புள்ளி 

                                அறிவியல் உலகத்திற்குத் தொல்காப்பியர் வழங்கிய அருங்கொடை , புள்ளி- (DOT)  தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் அறிவியல் மொழி (.Science of Language).நூல் ஆகும். இலக்கியம் பற்றிய நூல் அறிவியல் இலக்கியம் (....Science of  Literature) என்று கொள்க.  தொல்காப்பிய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது 

 * புள்ளியிட்டு எழுத்தின் மதிப்பைக் கூட்டவும் குறைக்கவும் (ஒலி அளவு, ஓசை) கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள் 

* புள்ளியிட்டு எண்ணின் மதிப்பைக் குறைக்கக் கற்றுக்கொடுத்தவர் தொல்காப்பியரே 

*கிரேக்கர்கள் தம் ்நெடுங்கணக்கில்(Alphabet ) முதல் பத்து எழுத்துக்களை ஒரு சிறு குறியீடு மூலம் வேறுபடுத்தி ஒன்று முதல் பத்து எண்களைக் குறித்தனர். 

 *தமிழர்கள் தம் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களைக் (க, உ, நு, ....ய)கொண்டே சிறு குறியீடுகளைச் சேர்த்து, ஒன்று முதல் பத்து எண்களைக் குறித்ததோடு பேரெண்களுக்குத் தனித்தனி குறியீடுகளையும் கொண்டிருந்தனர். *ரோமானியர்கள் சிறு சிறு கோடுகளை அடுக்கி எண்களைக் குறித்தனர். பேரெண்களைக் குறிக்கக் குறியீடுகளைப் பயன்படுத்தினர் 

தொல் தமிழர்:   

               ஐரோப்பிய அறிஞர்கள் தமிழை நன்கு ஆராய்ந்து உயர்தனிச் செம்மொழி என்று அறிவித்தனர். இன்றைய அறிவியல் யுகத்தில் கணினிப் புரட்சிக்கு ஈடு கொடுக்குமளவு தமிழ் பயன்படுகிறது என்றால் அதனைக்கன்னித்தமிழ்என்று கூறுவது பொருத்தம் தானே.  

வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர்கள் பல கண்டங்களைக் கடந்து பல தீவுகளைக் கண்டறிந்து குடியேறினர்.  தொன்மைத் தமிழகம் பல நாடுகளோடு அரசியல் உறவும் வணிகத் தொடர்புகளும் கொண்டிருந்தது. தமிழனின் அறிவு வளமும் செல்வச்சிறப்பும் உலகத்தாரை வியப்பில் ஆழ்த்தின. குறிப்பாக அறிவியல் துறைகள் அனைத்திலும் தமிழன் முத்திரைப் பதித்துள்ளான்.  

 “இந்து மாவாரியில் மூழ்கியுள்ள குமரிக் கண்டத்தின் தென்கோடியில் கி. மு. 50,000 (ஐம்பதாயிரம் ) ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சியடைந்த தமிழே உலக முதல் உயர் தனிச் செம்மொழி என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர்.  

........................தொடரும்...........................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக