வெள்ளி, 13 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -64. வழிபாடு : ஆகுதி செய்தற்கு ஓத்திர நெல்லுச் சோறு:

   தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -64. 

  முனைவர் இரெ. குமரன்: 4. பதிற்றுப்பத்து : 

             தொல்தமிழர் -  வழிபாடு : ஆகுதி செய்தற்கு ஓத்திர நெல்லுச் சோறு:   

‘மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த   

நெடுநுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை   

ஈன்ற மகள் பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன்    

நாடு பாதி படுத்து நண்ணார் ஓட்டி   

வெருவரு தானை கொடு செருப்பல கடந்து   

ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி   

ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி   

மாய வண்ணனை மனன் உறப்பெற்று அவற்கு   

ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து  

புரோசு மயக்கி.  

மல்லல் உள்ளமொடு மாசு அற விளங்கிய  செல்வக் கடுங்கோ வாழியாதனை...” 

                                  - கபிலர் - ஏழாம் பத்து,  பதிகம்:  

                             சோம்பி இராமல் ஊக்கத்தால் தன் பகைவரைத் தோல்வியடையச் செய்தவனும் மிக நுண்ணியவான நூற்கோள்வியை உடையவனுமாகிய அந்துவஞ்சேரலுக்கு ஒரு தந்தை பெற்ற மகளாகிய அச்சேரனின் பெருந்தேவி பெற்ற மகன் செல்வக்கடுங்கோவாழியாதன் ; அவன் தன் நாட்டில் பல ஊர்களைத் தோற்றுவித்தான் ; தன் பகவரைத் தோற்றோடச்செய்தான் ; பகைவர் அஞ்சத்தக்க சேனைகளோடு பல போர்களை வஞ்சியாது எதிர் நின்று வென்றான் ; புகழமைந்த பெரிய யாகங்களைச் செய்து முடித்தான் ; வற்றைச் செய்யும் பொழுதே பிற அறச் செயற்பாடுகளையும் செய்து முடித்தான் ; கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்தின் பொருந்தப் பெற்றான் ; அத்தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒரு வகை நெல் விளைதலை உடைய ஒகந்தூர் என்னும் ஊரினைத் தேவதானமாகக் கொடுத்துத் தன் அறநெறியின் அறிவைக்கண்டு தன் புரோகிதனும் மயங்குமாறு செய்தான் ; வளம் பொருந்திய மனத்தோடு குற்றமில்லாமல் 25 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.  

 (மடியா -  சோம்பல் இல்லாத ஊக்கம் ; மாற்றோர் - பகைவர். ; பிணித்த - சிறைப்படுத்திய. ;  பதி படுத்து - ஊர்களை உண்டாக்கி ; நண்ணார் - பகைவர் ;  வெருவரு - அஞ்சத்தக்க ;  செரு - போர் ; கடந்து - வென்று . ; ஏத்தல் - புகழ் ;  இடன் உடை - பெரிய ; ஓத்திர நெல் - இராச அன்னம் ; இறைவனுக்குப் படைக்க உயர்ந்த உயர்வகை நெல். மின்மினி நெல் என்றும் சொல்வர்.) 

....................................தொடரும்............................................. 

 

 

  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக