திருக்குறள்
– சிறப்புரை : 382
அஞ்சாமை ஈகை
அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு
இயல்பு. – 382
ஒரு
நல்ல அரசனுக்குரிய இலக்கணமாவது, பகைக்கு அஞ்சாமை, இரவலர்க்கு ஈதல், தெளிந்து ஆராயும்
அறிவு, மக்களுக்கு உழைப்பதில் ஊக்கம் ஆகிய இந்நான்கு இயல்புகளும் என்றும் குறைவுபடாமல்
இருப்பதேயாம்.
“ குழவியைப்
பார்த்து உறூஉம் தாய்போல் உலகத்து
மழை சுரந்து
அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல்
நின் செம்மையின் தர …. – கலித்தொகை.
அரசனே…
! குழந்தையைப் பார்த்து பார்த்து முலை சுரந்து
பால் ஊட்டும் தாயைப்போல, மழையானது தன்னை வேண்டின காலத்தே முறையாகப் பெய்து, உலகைப்
பாதுகாத்து வருகிறது ; இந்த நல்ல வளம் எல்லார்க்கும் தப்பாது வருதற்கு நின் செம்மையான
ஆட்சி முறையே காரணமாக விளங்குகிறது.
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு