திருக்குறள்
– சிறப்புரை : 384
அறனிழுக்கா
தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய
தரசு. – 384
அறத்திற்கு
இழுக்கு நேராவண்ணம் ஒழுகுதலும் ; அல்லவை நீக்கி அருளுதலும் ; வீரத்தில் அறவழியில் மானம் காத்தலும் ஆகிய அறங்களைப்
பேணுவதே ஒரு நல்ல அரசுக்குரிய இலக்கணமாம் .
“ ஞாயிறு அன்ன
வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன
தண் பெருஞ் சாயலும்
வானத்தன்ன வண்மையும்
மூன்றும்
உடையை ஆகி……
” - புறநானூறு.
சூரியனைப்
போன்ற வெம்மையான ஆற்றலுடைய வீரமும் திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மையும் வான் மழை
போன்ற கொடைச் சிறப்பும் உடையவனாகுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக