திருக்குறள்
– சிறப்புரை : 391
கல்வி
கற்க கசடறக்
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்
தக. – 391
கற்பதற்குத்
தகுந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துத் தெளிவாகக் கற்க வேண்டும் ; கற்றபின் கல்வி கற்றவன்
என்று சொல்லத் தகுதியுடையவனாக நடத்தல் வேண்டும்.
“ உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.” – புறநானூறு.
தன் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து அதனைப் போக்க
உதவி செய்தும் அவருக்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டும் கல்வி
கற்பது நன்மை பயக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக