திருக்குறள்
– சிறப்புரை : 373
நுண்ணிய
நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை
அறிவே மிகும். – 373
சான்றோர்அருளியஅறிவுசெறிந்த
நூல்களைக் கற்றுத்தேறினும் தீவினையானது கற்றறிந்த அறிவால் தெளிவிபெற
விடாது , இயல்பான அறிவே மேலெழுந்து செயல்படும்.
” நீர்வழிப்படூஉம்
புணைபோல் ஆருயிர்
முறை வழிப்படூஉம்
என்பது திறவோர்
காட்சியில்
தெளிந்தனம்…”
கணியன் பூங்குன்றன், புறநா.
192: 9 – 11
ஆற்று
நீரில் மிதந்து செல்லும் தெப்பம்போல, வாழ்க்கையும் ஊழின் வழியே செல்லும் என்பதைச் சான்றோர்
கூற்றால் தெரிந்துகொண்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக