திருக்குறள்
– சிறப்புரை : 372
பேதைப்
படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ்
உற்றக் கடை. – 372
தீவினையால்
பொருள் இழக்கும் காலத்து அறிவு கெடும் ; நல்வினையால்
பொருள் சேரும் காலத்து அறிவு விரிவாகும்.
வளம்பட வேண்டாதார்
யார் யாரும் இல்லை
அளந்தன போகம்
அவர் அவர் ஆற்றான்
-
நாலடியார்,
11 : 3: 1,2
செல்வ
வளத்தோடு இன்பமாக வாழ வேண்டும் என்று விரும்பாதார் யார் ? ஒருவரும் இல்லை ; ஆனால் அவரவர்
பழவினையால் அவரவர்க்குரிய செல்வமும் இன்பமும் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக