சனி, 29 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 370

திருக்குறள் – சிறப்புரை : 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். – 370
எந்நிலையிலும் எக்காலத்தும் ஆசை தீர்ந்து போயிற்று என்ற நிலை எய்துதல் அரிது ; ஆசையை விட்டொழித்தால் அந்நிலையில் பிறவாமையாகிய பேரின்பம் கிட்டும்.

“ ஐம்புலன்களும் மட்டுப்படாமல் பொருள்கள்மேல் பொருந்தித் துய்க்க மேலும் மேலும் ஆர்த்தார்த்து எழும்பும் ஆசைகளை வேரோடு களைதல்தான் புலனடக்கத்தினால் ஒருவன் பெறும் பயனாகும். ஆசைதான் பிறவிக்கு வித்து என்றும், துன்பம் ஆகிய நெருப்பு எரிதற்கு ஆசையாகிய விறகுதான் ஏது என்றும், ஆசை தீர்ந்தால் துயரமும் தீர்ந்து போகுமென்றும் பெளத்த நூல்கள் பகர்கின்றன.” – பேரா. சோ.ந. கந்தசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக