திருக்குறள்
– சிறப்புரை : 385
இயற்றலும் ஈட்டலும்
காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்லது அரசு. -385
ஓர் அரசு எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு இயங்க வேண்டும்..?
பொருள் வரும்
வழிகளை நெறிதவறாது தேர்ந்தெடுத்தலும் அவ்வழிகளில்
பொருளை ஈட்டலும் ஈட்டிய செல்வத்தைப் பேணிப்
பாதுகாத்தலும் செல்வத்தை நாட்டின் நலன் கருதி ஆராய்ந்து வகுத்த வழிகளில் செலவு செய்தலும்
ஆகிய நான்கு வழிகளில் இயங்குவதே சிறந்த அரசாகும்.
“ குடிபுரவு
இரக்கும் கூர் இல் ஆண்மைச்
சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே.” – புறநானூறு.
குடிமக்களிடம்
வரிவேண்டி இரக்கும் சிறுமை உள்ளம் படைத்த,
மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால், அது அவனுக்குத்
தாங்க இயலாத சுமையாக விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக